இதய நாளத் தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் உபகரணத்தால் தொற்று பாதிப் புக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு நுட்பமாக சிகிச்சையளித்து அப் பல்லோ மருத்துவக் குழுவினர் உயிர் காத்துள்ளனர். இதுதொடர்பாக மனை நிர்வாகிகள் கூறியதாவது:
newvenusclinic.com
1 August 2024
சென்னை, ஜூலை 3: இதய நாளத் தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் உபகரணத்தால் தொற்று பாதிப் புக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு நுட்பமாக சிகிச்சையளித்து அப் பல்லோ மருத்துவக் குழுவினர் உயிர் காத்துள்ளனர். இதுதொடர்பாக மனை நிர்வாகிகள் கூறியதாவது: கடுமையான காய்ச்சல் பாதிப்பு – டன் 76 வயதான முதியவர் ஒருவர் அண்மையில் பழைய மாமல்லபு ரம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
மருத்துவ அவர் ஏற்கெனவே மாரடைப்புக் குள்ளாகி வேறு ஒரு மருத்துவமனை யில்இதயரத்தநாளத்தில்ஸ்டென்ட் உபகரணம் பொருத்தியிருந்தார். இந்த சூழலில் தொடர் காய்ச்சலுக் குள்ளான அவரை பரிசோதித்ததில் ஸ்டென்ட் உபகரணத்தினால் இதய நாளத்தில் அவருக்கு தீவிர தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அரிதினும், அரிதான இந்த பாதிப்பு ‘அயோடிக் வால்’ எனப் படும் பெருந்தமனி சுவர் வரை பர வக்கூடிய நிலை இருந்தது. இப்பி ரச்னைக்கு தொற்றுக்குள்ளான ஸ்டென்ட் உபகரணத்தை பிரித்து எடுப்பதை மட்டுமே ஒரே தீர்வாக மருத்துவக் குழுவினர் கருதினர்.
இத்தகைய சிகிச்சைகள் வயது முதிர்ந்த ஒருவருக்கு மேற்கொள் ளும்போது உயிரிழப்பு நேரிட அதிக வாய்ப்புள்ளது. இருந்தபோ திலும் அந்த சவாலைசாத்தியமாக்க மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.எம்.யூசுப், மயக்க மருந்தியல் நிபுணர் கல்யா ணராமன், முதுநிலை மருத்துவர் கள் கண்ணையன், மதுபிரபுதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நுட்பமாக அதற்கான சிகிச்சையை முன்னெடுத்தனர்.
அதன்படி,சம்பந்தப்பட்டஇதய நாளத்துக்கு மாற்று வழியில் ரத்தம் செல்வதற்கான பை-பாஸ் கிராப்ட் அறுவை சிகிச்சை மேற்கொண்ட னர். அதைத் தொடர்ந்து தொற் றுக்கு காரணமான ஸ்டென்ட் உப கரணத்தை நுட்பமாக பிரித்தெடுத் தனர்.இதன் பயனாக அந்த முதிய வர் நலம் பெற்று வீடு திரும்பினார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
In case of a life-threatening emergency, please call immediately to get help from paramedics and first responders.
WhatsApp us