New Venus Clinic

Mail Us

newvenusclinic2021@gmail.com

Call Us

+91 7708317826, +91 7010315857

Whatsapp

+918148070207

மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த இன்ட்ராகோரோனரி உறை குழாயைப் பிரித்தெடுத்து இருக்கிறது அப்போலோ மருத்துவமனை.

அப்போலோ OMR மருத்துவமனை மிகவும் சிக்கலான, இதயத்தில் பொருத்தப்பட்ட உறை குழாயை மிகத்துல்லியமாக பிரித்து எடுத்து சாதனை!

சாதனை!

சென்னை, சென்னை அப்போலோ OMR இன்ட்ராகோரோனரி ஸ்டென்டில் தொற்று இருப்பது மருத்துவமனை [Apollo OMR Hospital], மிகவும் அரிதான மேலும் அதிக ஆபத்துள்ள இன்ட்ராகோரோனரி உறை குழாய் பிரித்தெடுக்கும் மருத்துவ நடைமுறையை (high-risk intracoronary stent extraction procedure] வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதன் மூலம் இதய அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது. மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான இந்த அறுவை சிகிச்சையானது, நோயாளிகளுக்கான மருத்துவப் பராமரிப்பில் முன்னோடித்துவமிக்க முன்னேற்றங்களை செயல்படுத்துவதிலும், மிகவும் சிக்கலான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஈடுஇணையற்ற மருத்துவ தீர்வுகளை வழங்குவதிலும் அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் எம். எம். யூசுப் [Dr M M Yusuf, Consultant Cardiac Surgeon, Apollo Hospitals) கூறுகையில், “இந்நோயாளிக்கு முதலில் இதய சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு
தெரியவந்தது. நோய்த்தொற்று அவரது இதய தமனியை அரித்து இருந்ததால், அது கிழிந்துப் போகும் சூழல் இருந்தது. மேலும் இதன் பாதிப்பு பெருநாடியின் சுவர் வரை நீளும் அபாயமும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இந்நோயாளிக்கு மிகவும் அதிக ஆபத்துள்ள, மிகவும் அரிதான மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் வயதான நோயாளி என்றால் இன்னும் ஆபத்து அதிகம். உலகளாவிய மருத்துவ தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் மருத்துவ தீர்வுகள் குறித்த பதிவுகளை ஆராய்ந்தறிந்த போது, இது போன்ற நிலைமைகளின் கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அந்த நோயாளிகள் இறக்கும் ஆபத்து 60% -க்கும் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது. மிகவும் சிக்கலான இந்த மருத்துவ நடைமுறையில் இருக்கும் அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து நோயாளி மற்றும் மருத்துவர்களாக இருந்த அவரது குடும்பத்தினருக்கும் முழுமையாக விளக்கி கூறப்பட்டது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *